பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ritarr. Qū காதல் மனத்தை வற்புறுத்திப் பாரதிதாசன் பாடுவது காண்க. ஒட்டும் இரண்டுளத்தைத்-தம்மில் ஓங்கிய காதலினைப் பிட்டுப்பிட் டுப்புகன்றார் -அதைப் பெற்றவர் கேட்கவில்லை குட்டை மனத்தாலே-அவர் கோபப் பெருக்காலே வெட்டிப் பிரிக்கவந்தார்-அந்த வீணையினை காதத்தினை என்று நெஞ்சில் ஈரம் கசிய மொழிந்துள்ளார். காதலின் நெஞ்ச உணர்வினை, அண்டைஇல் லத்தினிலே-என் அன்பன் இருக்கின்றான்! உண்ணும் அமுதிருந்தும்-எதிர் உண்ண முடிந்ததில்லை! தண்டமிழ்ப் பாட்டிருந்தும்-செவி சாய்த்திடக் கூடவில்லை! வண்ணமலர் சூடவில்லை-அது வாசலிற் பூத்திருந்தும்! மேலும், கூடத்தி லேமனப் பாடத்திலே-விழி: கூடிக்கிடந்திடும் ஆணழகை; - ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்-அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே மேலும்