பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதியும் சாரதிதாசனுக் பாடம் படித்து நிமிர்ந்தவிழி தனிற் பட்டுத் தெரித்தது மானின்விழி ஆடை திருத்திகின் றாள் அவள்தான் -இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்! ஆண் குழந்தைத் தாலாட்டுப் பாடலில், எல்லாம் அவன்செய லேஎன்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனித க்கும் காப்பார் கடவுள்உமைக் கட்டையில்ர்ே போகுமட்டும் வேர்ப்பீர், உழைப்பீர் எனஉ ரைக்கும் வீணருக்கும். மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே என் செந்தமிழே கண்ணுறங்கு! என்றும், இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே! வாயடியும் கையடியும் மறைவ தெங்காள்? சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றை: சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே இல்லை யாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும் -பாண்டியன் பரிசு இயல் 56 : 3 என்றும், தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுன் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! -பாரதிதாசன் கவிதைகள்: உலக ஒற்றுமை. என்றும்,