பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hy aாரதியும் பாரதிதாசனும் என்னென்று சொல்வேன்' என்னென்று சொல்வேன்! தமிழால், பாரதி தகுதி பெற்றதும், தமிழ்பா ரதியால் தகுதி பெற்றதும்! -பாரதிதாசன கவிதைகள : இரண்டாம் தொகுதி. பல்கலைச் செல்வர் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் பாரதியார் காட்டுத்திறம் குறித்துச் சிறப்பித்துக் கூறியுள்ளார். பாரதிதாசன் பாடல் குறித்துத் தமிழறிஞர் சிலரின் கருத்துகள் வருமாறு : "எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக் கும்: பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்" எ ஹ தமிழ்ப் பெரியார் திரு வி.க. அவர்களும், "பாரதிதாசன் கவிதை யில் வேகம் உண்டு; விடுதலைத் தாகம் உண்டு; பண்பும் உண்டு; பயனும் உண்டு" என்று பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களும், "பாரதியார் சொல்லும் வீரத்தமிழ்ச் சொல் இன்பத்தைப் பாரதிதாசன் பாடல் களில் காணலாம்", என்று பாரதியாருடன் பழகிய பெரியார் aரவி சு. நெல்லையருப்பரும், 'அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்பு கின்ற பேரறிஞர் பாரதிதாசன்" என்று புதுமைப் பித்தனும், "பாரதிதாசனின் தமிழ்ப்பற்றுக்கு எல்லை யில்லை; அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகிவிடுவான்", என்று டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்களும், 'பாரதிதாசனாருடன் பழகு வதன்மூலம் பாரதியைப் பார்க்கவில்ல்லயே, அவருடன் பழகவில்லையே என்ற குறை எனக்கு நிவர்த்தியாயிற்று" என்று, கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,