பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

М. ит. 39 பாரதிதாசனாரைப் பற்றியும் அவர்தம் கவிதை நலன் குறித்தும் கருத்துரை வழங்கியுள்ளார்கள். தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் தகுதிமிகு நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்கள் கருத்து வருமாறு: "புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்திய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறியாமல், பாரதிதாசனார் ஒருவரையே குறிக்குமாறு தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்று விட்டார். சிறந்ததை மிகமிக விரும்பிப் போற்றுதலும், தியதை மிகமிக வெறுத்துத் துாற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டிற் புகுந்து சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்கவழங்களையும் மூடக்கருத்துகளையும் கடிந்து பாடி, படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுகளில் விழுமிய கற்பனையும் உண்டு; வேகமான உணர்ச்சியும் உண்டு. பழந்தமிழ் மரபும் உண்டு; புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர் வாழ்வுக்கு அவர்தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்துவந்தன. அவர் பிரிவு தமிழினத்துக்குப் பெரிய இழப்பாயிற்று" தமிழிலக்கிய வானின் இருபெரும் நிலவும் கதிரும் பற்றிய சுருக்கக் கருத்து இதுவெனக் கொள்ளலாம்.