பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வள்ளுவர் வழியில் பாரதி பாட்டுக்கொரு புலவனாய் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நன்கு இன்றளவும் வாழ்ந்துகொண்டிருப் பவர் பாரதியார் ஆவர். இந்த வையத்து நாட்டிலெல் லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேயந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாவின் படை அணியில் ஒரு வீரராய் விளங்கிய தீரர் பாரதியார். "நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்றபடியும் "எந்தன் பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாவித்திடவேண்டும்" என்றபடியும் வாழ்ந்தவர். தமிழ் மொழியின் மாட்டுப் பெரிதும் பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்த பாரதியார் முன்னோர் மொழிந்த சொற்களைப் பெருமிதத்தோடு பாராட்டியவர் ஆவர். கள்ளையும் தீயையும் சேர்த்து-கல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்து தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்- பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். தாம் உயிரோடிருப்பதற்குக் காரணமே தம் தந்தை யின் அருள்வலியும், முன்னர் வாழ்ந்த பெரும் புலவர்களின் தவவலியுமே என்று கருதினார் பாரதியார். தந்தை அருள்வலி யாலும்-முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டும் காலன்-என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான். اس-۳ تا tur۳۰