பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதியும் பாரதிதாசனும் ஆங்கிலேயர் இந்நாட்டிற்களித்த அன்னியக் கல்வி முறை இந்நாட்டு மககளைப் பழமையின் பெருமையைபண்பாட்டின் சிறப்பினை அறியவொட்டாமல் தடுத்து விட்டது என்பது பாரதியாரின் கருத்தாகும். எனவே அவர் பின்வருமாறு பாடுகிறார் : சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பா னித்துத் தர்மம் வளர்த்ததும் அன்ன யாவும் அறிந்திலர் பாரதத் தாங்கி லம்பயில் பள்ளியுட்போகுநர் மேலும் பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோ:வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரச் செய்யு ளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும்.பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும்