பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6\eirr. ᏭᎢ திருவள்ளுவர் உலகிற் பிறந்த மக்கள் அனைவரும் ஒரு குலம்; பிறப்பால் வேற்றுமையில்லை; வாழும் வகையால் தான் வேற்றுமை என்று கு றிப்பிட்டார். பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை ய ன் (குறள் : 972) என்றார். இன்று உலகில் நட்பு நீங்கிப் பகை வளர்வ தற்கும், அன்பு அகன்று கொடுமை குவிவதற்கும் இந்த உயர்பண்பு மனித சமுதாயத்தைவிட்டு விடைகொண்டு விட்டமையே காரணங்களாகும். தி ரு வ ள் ளு வர் வழிவந்த திருமூலர் பெருமானும், - ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் கன்றே கினைமின் என்றார். பாரதியாரும் திருவள்ளுவர் பெருமானின் கருத்துகளில் ஊறித் திளைத்தவரான காரணத்தால் சமுதாயத்தில் நிலவும் சாதி பற்றிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றார். சாதி இரண்டெழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம் என்று ஒளவையின் அமுதமொழியினைப் போற்று கின்றார். பாப்பாப் பாட்டில் பாப்பாக்களுக்கு நீதி நன்னெறியினை நெஞ்சில் நிலைநிறுத்தும் போக்கிற் பல நீதிக் கருத்துகளை அவர்கள் உளங்கொளக் கூறுகிறார். சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம என்று கூறியுள்ளார். முரசு'ப் பாடலிலும்