பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாரதியும் பாரதிதாசனும் நிகர் என்று கொட்டு-முரசே இந்த ணிேலம் வாழ்பவர் எல்லாம் தகர் என்று கொட்டு முரசே-பெய்மைச் சாதி வகுப்பினை எல்லாம் என்று குறிப்பிட்டுள்ளார். வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் இங்கு மானிடர் வேற்றுமை யில்லை என்றும் முழங்குகின்றார். சாதிப் பிரிவுகளும், சாதிக் கொரு நீதிப்பிரிவுகளும் நாட்டிற்குக் கேடு பயப்பவை என்று கண்டார் பாரதியார். எனவே அவர், சாதிப் பிரிவுகள் சொல்லி-அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்தார்-அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் என்று மனம் நொந்து குறிப்பிட்டார். பெண் குலத்திற்குப் பெருஞ்சிறப்பு நல்கியது தமிழினம் எனலாம். சங்க இலக்கிய காலத்திலேயே பெண் பெற்ற பெருவாழ்வு. அவ்விலக்கியங்களின்வழி தெளிவுறும். பெண்ணிற்குத் தனிச் சிறப்பு நல்கிப் போற்றியது தமிழினம். இல்லத்தை ஆளும் சிறப்பினைப் பெண்ணிற்கே தந்தது. இ ல் லா ள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை என்னும் தமிழ் மொழி எழுந்தது. - * இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (குறள் : 58) என்றார் திருவள்ளுவர்.