பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரதியும் aாரதிதாசனும் வாங்கிய கதையாகப் போய்விடும் என்று கண்டார் பாரதியார். எனவே அவர் பாடினார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த காட்டிலே என்ற பாரதியின் முழக்கம் வள்ளுவர் பெருமானின் பெண்மை போற்றும் பெருவழியில் வந்ததன்றோ? கற்க வேண்டிய கல்வியினையே கற்கவேண்டும். கற்றபின் கற்ற வழியிலே ஒழுகவேண்டும் என்பது வள்ளுவர் வழங்கிய வான்மறையாகும். கற்க கசடறக் கற்பவை கற்றபின் கிற்க அதற்குத் தக * குறள் : (391) ஆனால் பாரதியாt பிறந்த காலத்தில் இந்நாட்டின் நடைமுறையில் இருந்த கல்வி நடைமுறைக்கு ஒத்துவராத ஆங்கில கல்வியாகும். மெக்காலே ஏற்படுத்தித் தந்த அவ் அன்னியக் கல்விமுறை அண்ணல் காந்தியடிகள் குறிப்பிட்டது போல அடிமைகளை உருவாக்கும் கல்வி யாக-ஆங்கில எஜமானருக்கு விசுவாசமாக உழைக்கும் எழுத்தர்களை உருவாக்கும் கல்வியாக இலங்கியது. அக்கால ஆங்கிலக் கல்வியின் புன்மையினைப் பாரதியார் மனம் வெதும்பிப் பின்வருமாறு சொல்கின்றார். கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர் பின் கார்கொள்வானில் ஓர் மீன்நிலை தேர்ந்திலார்