பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

В. сат. 41 அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் வணிகமும் பொருள் நூலு பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் துணியும்.ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எட்டுனைப் பயன் கண்டிலார். இதனாலேயே திருநெல்வேலியில் தாம் பயின்ற ஆங்கிலக் கல்வியினைப் பின்வருமாறு திறனாய்கின்றார் பாரதியார். செலவு தந்தைக்கு ஓராயிரம் சென்றது தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன கலமோர் எட்டுணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன். தமிழ் இலக்கி:ங்களின் சாரமாக-பிழிவாக ஒரு கருத்தை நாம் காணலாம். அஃது அனை அறத்தின்பாற் கொண்டிருக்கும் அசையாத பற்காகும். 'அறம்' என்ற சொல்லிற்கு-அதன் கோட்பாட்டிற்கு அ தி க ம ா க சி சிறப்பிடம் வழங்கும் வள்ளுவர்தம் நூலே அறநூல்' எனப் போற்றப்படுவதாகும். மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல ரே பிற (குறள் : 34) என்பார் அவர். மேலும், அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. (குறள் : 39) என்றும் குறிப்பிடுவார். வள்ளுவர் வழிதந்த பாரதியாரும் அறத்தில் அசையாத பற்றுள்ளவர் என்பது பலவகை களில் தெரிகின்றது.