பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. கா. 43 அருளிலார்க்கு அவ்வுலக மில்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள : 247) என்றும், இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு (குறள் : 752) என்றும், செய்க பொருளைச் செருநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில் (குறள் : 759) என்றும் திருவள்ளுவர் பலபடப் பொருளின் இன்றியமை யாமையினைப் புலப்படுத்தியுள்ளார். பொருளின்றித் தம் வாழ்நாளில் பல இடர்களைக் கண்டவர் பாரதியார் எனவே அவர், பொருளி லார்க்கிலை இவ்வுலகு என்றகம் புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண் பொருளிலார்க்கு இனமில்லை துணையிலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்தெற்றுமால் என்று திருவள்ளுவர் பெருமான் அருளிய தொடரை வைத்தே உலக அனுபவ நிலையினை உள்ளபடியே எடுத்துரைத்தார். பாரதியார் பசித்து வாழ்ந்தவர்; பசியின் கொடுமை அவருக்குத் தெரியும். எனவே அவர் பின்வருமாறு பாடினார். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்றார், -