பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'44 பாரதியும் பாரதிதாசனும் திருவள்ளுவர் பெருமானும், நெருப்பினுள் துஞ்சலு மாகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது (குறள் : 1049) என்று வறுமையின் கொடுமையினைச் சொற்களிற் குறட்பாவாக வடித்தார். மே லு ம் திருவள ளுவர் சொன்னார். இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (குறள் : 1062) என்று இக்கருத்தினைப் பின்பற்றியே பாரதியாரும், இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார். னேடத்தில் மயங்குவது வெளி உலகு. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆாவி கட்டியவர்களை யெல்லாம் இராமலிங்க அடிகளாராக எண்ணும் மனப் பான்மை வந்துவிட்டது. எனவே காவியுடை தரி த்து, கமண்டலத்தைக் கையிலேந்தி ஊரை ஏமாற்றுபவர்கள் தொகையும் மிகுந்துவிட்டது. திருவளளுவர் பெருமான் காலத்து நிலையும் இதுதான்போலும்! அவர், மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (குறள் : 280) என்று போலித் துறவத்தைக் கண்டித்தார். வள்ளுவர் வழியில் நடை பழகிய பாரதியாரும்,