பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛, Lúry « 45 காவித்துணி வேண்டா, கற்றைச்சடை வேண்டா பாவித்தல் போதும் பரமனிலை எய்துதற்கே என்றார். படித்தவர்கள் படியாதவர்களைப் பற்றிக் கவலை யுறாமல் வாழ்வதென்பது ஆன்னியக் கல்வியால் விளைந்த மற்றோர் அதிர்ச்சி நிலையாகும். பாரதியாரும் இதனைப் "புதிய கோணங்கி'யில் படித்தவன் ஐயோ வெனப் போவான்’ என முழங்குகிறார். காரணம், படித்த வினிடம் சூதும் ம்ோசமும் சேர்ந்து, சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலை ஏற்பட்டுவிட்டது என்பது தான் திருவள்ளுவர் பெருமான், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் கற்றாள் தொழாஅ ரெனின் (குறள் : 2) என்று கற்றதன் பயன் கடவுளைத் தொழுதுை என்றார். இம்முறையில் பாரதியாருடைய முத்து மாரியம்மன், பாட்டும் அமைந்திருக்கக் காணலாம். உலகத்து நாயகியே-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரீ! உன்பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரீ: பல கற்றும் பலகேட்டும் எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரீ: பயன் ஒன்றும் இலலையடி-எங்கள் முத்து மாரியம்மா! எங்கள் முத்து மாரீ! இவ்வாறு,தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானின் அடியொற்றிப் பைசி தமிழ்ச் சாரதி பாரதியும் பாடல்கள் புனைந்துள்ளார் என்பது பல சான்றுகளால் நிறுவப்படு கின்றது.