பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தமிழ்மொழி தமிழ்நாடு பற்றிப் பாரதியார் இந்த நூற்றாண்டினைப் பாரதி நூற்றாண்டு என்று சொல்லுமளவிற்குப் பாரதி இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெறுகின்றார். பாரதி வாழ்ந்து காலத்தையொட்டி வாழ்ந்த பெருங்கவிஞர் களாகப் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ. இராமவிங்கம்பிள்ளை ஆகிய மூவரையும் குறிக்கலாம். பாரதியால் ஈர்க்கப்பெற்றுச் கப்புரத்தினமாக இருந்த தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டு பாரதியீடம் தாம் கொண்டிருந்த மதிப்பைப் புலப்படுத்தினார் பரட்சிக் கவிஞர் பாரதி - தாசன், பாட்டுக்கொரு புலவன் பாரதியடா, அவன் பாட்டைப் பண்ணோடு எடினானேயடா அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் டோனேனேயடா அந்தக் கிறுக்கில் உளறும்மொழி பொறுப்பாயேயடா என்று கவிமணி பாரதி பாட்டிற்குத் திறனாய்வு மொழி கண்டார். பாரதி சென்ற தேசிய நெறியிற் சென்று காந்தியக் கவிஞராகத் துலங்கியவர் நாமக்கல்லார் ஆவர். இவ்வாறு சமகாலத்துப் புலவர் பெருமக்களால் ஒருமுகமாகப் பாராட்டப்பெற்றவர் பாரதி என்பதனை அறியும்பொழுது பாரதியின் திறமும் புகழும் குன்றிலிட்ட விளக்கெனத் திகழ்வதைக் காணலாம். பாரதி பெருங்கவிஞராகத் திகழ்ந்தபோது விநாயகர் நான்மணிமாலை பாடினார். அவ்விநாயகர் நான்மணி மாலையில் வெண்பாவில் அமைந்த ஒரு பாடல் வருமாறு :