பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. ram. 47 மக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்: உமக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்: சிங்தையே யிம்மூன்றுஞ் செற், எனவே கவிதையைத் தம் தொழிலாகக் கொண்டு, தாம் பிறந்த பொன்னாட்டிற்குழைத்தலையே நம் உயிர் மூச்சாகக் கொண்டு, அணுவளவும் அயராமல் தாம் வாழ்ந்த கால எல்லை அளவும் வாழ்ந்தவர் பாரதியார் ஆவர். காலனையே சிறு புல்லாக நினைத்து மிதிக்கத் துணிந்த பாரதியா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். தேடிச்சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனா வாடித் துன்பமிக வுழன்று-பிறர் வாடப்பல செயல்கள் செய்து-கரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல வேடிக்கை மனிதரைப்பே லே-நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? என்று பாடும் 'பாரதியின் பாட்டில் ஒரு கொள்கைப் பிடிப்பு இருப்பதனைப் பார்க்கலாம். பாரதி இன்று பாராட்டப் பெறுவதற்கே பெருங் காரணமாய் அமைந்தன. அவர்தம் கவிதையாற்றலும், தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றுமேயாகும். பாப்பாவுக்குப் பாட்டிசைக்கும் பாரதி தம் தமிழ்மொழிப் பற்றை எடுத்துரைக்கின்றார். சொல்லில் உயர்வு:தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்டன.