பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரதியும் பாரதிதாசனும் பாப்பாவுக்குப் பாடிய பாரதி பெரியவர்களுக்கும் தமிழ்மொழிப் பற்றினைக் கொளுத்துகின்றார். மொழிப் பற்றற்ற மக்களைப் பார்த்துப் பின்வருவாறு இடித்துரைக் கின்றார் பாரதியார். - பாமரராய் விலங்குகளாய், உலக னைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் கன்றோ? சொல்வீர்! என்று அறைகூவல் விடுத்த பாரதி, அவர்கள் மொழிப் பற்று பெறவேண்டும் என்பதற்குப் பின்வருமாறு உரத்த குரலில் உண்மையை எடுத்துரைக்கின்றார். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம். இவ்வாறு சொல்வதற்குப் பாரதியாருக்குத் தகுதி உண்டு. எட்டையபுரத்தில் தமிழும், திருநெல்வேலியில் ஆங்கிலமும், காசியில் இந்தியும், வடமொழியும், புதுச்சேரி யில் பிரெஞ்சும், வங்காளமும், பிற நாட்டு மொழிகளான ஜெர்மன், இலத்தீன், ஒரளவிற்கு அரபு, உருது, மலையாளம், தெலுங்கு மொழிகளும் கற்றுத் தேர்ந்தவர் பாரதியார் ஆவர். மொழியுணர்ச்சியற்ற மக்களுக்கு மொழியார்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்தம் தலையாய நோக்க மாக அமைந்ததனைக் கீழ்வரும் அவர்தம் கவிதை அடிகள் உணர்த்தும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை