பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.uw. 49 ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒருசொற் கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர். பாரதியாருக்குத் தமிழ் மொழிமாட்டு அமைந்திருந்த காதல் அளப்பரிதாகும். ஏனெனில் தமிழ்ச் சுவை தேர்ந் தால் துறக்கவும் இன்பமே இங்கு வந்து வாய்த்து விடும் என்று உறுதியாக நம்பினார் பாரதியார். அவரே கூறுகிறார் கேட்போம். உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்! தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் தமிழ்ச்சாதி தமிழ்மொழியால் சாகாவரம் பெற்ற ஒன்றாகக் கருதுகின்றார் பாரதியrர். இதனைப்பின் விரும் பகுதி உணர்த்தும். சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும். திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவு மழகுங் கருதியும் எல்லையொன் றின்மை யெனும் பொருளதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலு முயற்சியைக் கருதியும் முன்புகான் தமிழச் சாதியை யமரத் தன்மைவாய்க் ததுவென் Drrr.-4