பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பதினைந்து கட்டுரைகள் கொண்ட இந்நூல், இந்த நூற்றாண்டின் இணையிலாத இருபெருங் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் குறித்த செய்திகளை நிரம்பக்கொண்டு திகழ்கின்றது. பாரதியின் தாசனாகப் பாரதிதாசன் மிளிர்ந்தார். பாரதியார் தேசியக் கவிஞராக-விடுதலைக் கவிஞராகத் திகழ்ந்தார். பாரதிதாசன் சமுதாயக் கவிஞராகத் துலங்கினார். முன்னவர் இறைவன் பற்றியும் நாட்டு விடுதலை பற்றியும் பாடினார். பாரதிதாசன் இயற்கை, பெண்மை, சமுதாயம் பற்றிப் பாடினார். இருவரும் இந் நூற்றாண்டின் இணையிலாக் கவிஞர்கள் ുഖi്. இவ்விருவர்தம் பாட்டுத் திறம் இந் நூலில் நன்கு விளக்கப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் நூற்றாண்டு விழாக் காணும் இவ்விருவர்தம் பாநலன்களைத் தமிழுலகம் நன்கு துய்த்து மகிழ்வதோடு பயனும் பெற்றுத் தமிழர் வாழ்விற் சிறக்கவேண்டும் என்னும் பெருநோக்கில் இந் நூல் உருவாக்கப்பெற்றுள்ளது. 'கூறியது கூறல் குற்றம் சில விடங்களில் தென்படலாம், அவை கருத்தை வலியுறுத்தவே எனக் கொள்க. இந் நூல் எழுதியதன் வாயிலாக-இருபெருங் கவிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் இவ்வேளையின் நான் பெருமகிழ்வெய்துகிறேன். -சி. பா.