பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாரதியும் பாரதிதாசனும் றுறுதிகொண் டிருந்தேன். ஒரு பதினாயிரஞ் சனிவாய்ப்பட்டுத் தமிழச்சாதிதான் உள்ளுடைவின்றி யுழைத்திடு நெறிகளைக் கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன். "தமிழ்த்தாய்" என்னும் பிறிதோர் தலைப்பில் அமைந்த பாடலிலும் இக்கருத்து எதிரொலிக்கக் காணலாம். ஆதிசிவன் பெற்றுவிட்டான்- என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான் மூன்று குலத்தமிழ் மன்னர்- என்னை மூண்ட கல்லன்பொடு நித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளினுள்ளே-உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன் கள்ளையுந் தீயையுஞ் சேர்த்து-கல்ல காற்றையும் வான வெளியையுஞ் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்- பல தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார். இவ்வாறு பாரதியார் பலவிடங்களிலும் தம் தமிழ் மொழிப்பற்றைத் திறம்பட வெளியிட்டிருக்கக் காணலாம். ஆயினும் பாரதியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழிக்கு நல்ல ஆக்கம் இல்லை புலவர்கள் ஜமீன்தார் களுக்குச் சீட்டுக்கவி எழுதிப் பொருள் பெற்று வாழ்ந்து வந்தனர். நாட்டில் நடைபெற்ற அன்னிய ஆட்சி தமிழை ஆதரிக்கவில்லை; அதனால் வளர்க்கவும் இல்லை. அன்னிய மொழியாகிய ஆங்கிலமே இங்கு அரசோச்சியது.