பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாரதியும் பாரதிதாசனும் செலவு தந்தைக்கோ ராயிர்ஞ்சென்றது தீதெனக்குப் பல்லாயிரஞ்சேர்ந்தன கலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை காற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன் என்று ஆவேசமாக முழங்குகின்றார் பாரதியார். இவ்வாறு ஆங்கிலப் பள்ளியில் படிப்பவர்கள் கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததனையும். சேரன் தம்பி சிலம்பை இசைத்ததனையும், தெய்வ வள்ளுவன் வான்மறை செய்த தனையும் அறியாதவர்களாகிறார்கள் என்பது பாரதியின் கணிப்பாகும். பாரதி உரைநடையிற் பின்வருமாறு அன்று தமிழ்நாட்டில் நிலவிய இழிநிலையினைப் புலப்படுத்து கின்றார். - - - - உண்மையான கவிதைக்குத் தமிழ்நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து. கதை களை மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் o எழுதுகிறார்கள். அவர்களுக்குக் கொஞ்ச லாப மேற் படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ்மனுபவிக்க வழியில்லை. -பாரதி, நூல்கள் : கட்டுரைகள். பக்கம் 397 : பாரதி பிரசுராலயம். மேலும் பாரதியார் அக்கால அரசும்தமிழிற்கு ஆதரவாக இல்லை என்பதனைப் பின்வரும் அடிகளில் தெற்றெனப் புலப்படுத்துகின்றார்.