பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Лит. 5.3 தமிழ்நாட்டில் நடைபெறும் ராஜாங்கம் தமிழ்ப் பாஷையில் தேர்ச்சியுடையதன்று. தமிழ் முழு நாகரிகமுடையதா. இல்லையா' என்பதைப் பற்றிய சந்தேகங்களுடையது. ஆதலால் தமிழ்ப் படிப் பில்லாமலும், தமிழ் மனமில்லாமலும் ஸந்தோஷ மடைந்திருக்கும் இயல்புடையது. - -பாரதி நூல்கள்; கட்டுரைகள், பக்கம் 40 , பாரதி பிரசுராலயம். கால நிலையாலும், தேச நிலையாலும், ஆட்சி நிலையாலும், மக்கள் மனப்போக்காலும் தமிழ்மொழி தாழ்நிலையில் மதிக்கப்பெற்றுப் புறக்கணிக்கப்பட்ட நிலையினைப் படம்பிடித்துக்காட்டிப் பசுமரத்தாணி யென நம் நெஞ்சில் பதியவைப்பார் போன்று 'தமிழ்த் தாயின் கூற்றில் பின்வருமாறு பாடுகின்றார் : தந்தை அருள்வலி யாலும் முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டுங் காலன்-என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் இன்றொரு சொல்லினைக் கேட்டேன்!-இனி ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள் கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்! புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை