பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரதியும் பாரதிதாசனும் சொல்லவுங் கூடுவ தில்லை-அவை சொல்லுங் திறமை தமிழ்மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த o மேற்குமொழிகள் புவியிசை யோங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ! சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் தந்தை யருள்வலி யாலும்-இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன். இந்த நீண்ட பாடலை நெடிது நோக்கிடும்பொழுது பாரதி உணர்வின் இமயமாக விளங்கிய திறமும், தமிழ் மொழிக்கு வசை வந்துற்றபோது துடிதுடித்த நெகிழ்வும், அவ் வசை போக்கவேண்டி விடுக்கும் வேண்டுகோளும், அவ்வேண்டுகோள் நிறைவேறும் காலையில் அவன் கொள்ளும் நம்பிக்கை எக்காளமும் நன்கு விளங்கக் காணலாம். எனவே ஆக்க வழிகளில் தமிழ்மொழியினை வளர்க்க வேண்டும் என்ற அக்கறைகொண்டு சில திட்டமுறைகளை யும்; செயற்பாட்டிற்கென அறிஞர் பெருமக்களிடம் எடுத்துரைக்கின்றார் பாரதியார். அவை வருமாறு : பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்