பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so, tarr. 55 மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும். மொழிபெயர்ப்பிலக்கியம் மட்டுமின்றி, இயல்பாகவே எழுதப்படும் கவிதை இலக்கியமும் எளிமையும் புதுமையுங் கொண்டு திகழவேண்டும் என்பதனைப் பாரதியார் பாஞ்சாலி சபதத்தின் முதற்பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். எளிய பதங்கள், எளிய நடை. எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன். க்ாவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும். Lä. இக் கருத்தினையே கட்டுரையொன்றிலும் பின்வருமாறு புலப்படுத்தியிருக்கக் காணலாம். யாவருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடை. யில் காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச் செல்வம் சேர மார்க்கமில்லை என்பது ப்ரத்யகrம். எளியநடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொது ஜனக் கல்வியும் பரவிவரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். - -பாரகி நூல்கள்; கட்டுரைகள் ாக்கம் 584, பாரதி பிரசுராலயம்.