பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரதியும் வாரதிதாசனும் இவ்வாறெல்லாம் காலத்திற்கு ஏற்பக் காலந்தோறும் வளர்ந்து கன்னித் தமிழாகவே-முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய் விளங்கும் தமிழ்மொழியினைப் பின்வருமாறு நாவார மனமார வாழ்த்தினார் பாரதியார். - வாழ்க கிரந்தரம். வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வான மளந்த தனைத்து மளத்திடு வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே. o குழ்கலி நீங்கத் தமிழ்மொழி யோங்கத் துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே. பாரதியாருக்கு நாடு என்றால் அது பாரத மணித்திரு. நாடுதான், உலகனைத்தையும் ஒர் குடும்பமாகக் கண்டவர் பாரதியார். காக்கை குருவிகளைத் தம் சாதியாகக் கண்டு கடலும் மலையும் தம் கூட்டமென எண்ணி வாழ்ந்தவர் பாரதி "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா" என்று உளம் உருகி நின்றவர்