பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ést, aurr. 57 பாரதி. எனவே அவர்தம் பரந்த உள்ளம் பாரதத் நிருநாட்டினை நாடாகக் கண்டாலும் தாம் பிறந்த மண்ணாகிய செந்தமிழ்த் திருநாட்டினையும் பாடாமல் நிற்கவில்லை. பாரத நாட்டைப் பாடிய பாரதி தமிழ் நாட்டினையும் மறவாமற் போற்றிப் பாடுகின்றார். பாட்டின் தொடக்கமே உவகைப் பெருக்கை உணர்த்தி விடுகின்றது. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே தமிழ்மொழி புகழ் மணக்க வாழும் எல்லையினைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். நீலத் திரைக்கட லோரத்திலே - கின்று கித்தங் தவஞ்செய் குமரியெல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ் மண்டி கிடக்குங் தமிழ்நாடு. கல்வியில் தமிழ்நாடு தலைநிமிரிந்து நிற்பதும் கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்திருப்பதும் பாரதிக்குப் பெருமிதம் சேர்க்கின்றன. எனவே பின்வருமாறு பாடு கின்றார். கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு கல்ல பல்வித மாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. மேலும் திருக்குறள் அளித்த திருவள்ளுவனை உலகுக்கே கொடையாக வழங்கிவிட்டதாம் தமிழ்நாடு.