பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாரதியும் பாரதி தாசனும் தமிழன்னைக்கு அணியாகும் அழகு ஆரமாம் சிலப்பதி காரத்தைத் தந்த நாடும் தமிழ்நாடுதான் என்று மகிழ் கிறார் பாரதி. வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி யாரம் படைத்த தமிழ்நாடு இவ்வாறாகத் தமிழ்நாட்டை எண்ணி மகிழும் பாரதியார் வாழிய செந்தமிழ் என்னும் வாழ்த்துப் பாடலில் தமிழ்மொழியையும், அம்மொழி பேசும் தமிழரையும் அத்தமிழர் வாழும் தமிழ்நாட்டை உ ஸ் ள ட க் கி ய பாரத மணித்திருநாட்டையும் ஒன்றிணைத்துப் பேசுகின்றார். - வாழிய செந்தமிழ் வாழ்க கற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு' இத்திருநாட்டில் இன்னல்கள் மாய்ந்து நன்மைகள் நிறைந்து, அறம் வளர்ந்து. மறம் தொலைந்து மக்கள் அனைவரும் நல்வாழ்வும் நலவாழ்வும் வாழவேண்டும் என்று எண்ணினார் பாரதியார் அவர் எண்ணங்கள் நிாை வேறி இன்பங்கள் பொங்கி, அமைதி இந்நாட்டில் பொலிவ தாகுக.