பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய், காலம் பல கடந்தும் தன் சீரிளமைத் திறம் குன்றாமல் நின்று மிளிர்வது கன்னித் தமிழாகும் என்று பிறந்தவள் இவள் என்று உணர முடியாத இயல்பினைக் கொண்டவளாய் விளங்குபவள் தமிழ்த்தாய். முப்பது நூற்றாண்டுக் காலமாக ஒருமுறை யான வரலாற்றினைக் கொண்டிலங்குவது தமிழ்மொழி யாகும். தமிழ்மொழியின் பழமையும் பெருமையும் பாரறிந்தனவாகும். பாரதியின் பாப்பாப் பாட்டு மிகவும் புகழ் பெற்ற தாகும். விளையும் பயிர் முளையிலே விளங்கும்’ என்பது ஆன்றோர் அருளிய மொழி. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதும், ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையாது" என்பதும் அவர்களின் அனுபவத்தில் கிளைத்த பொன்மொழிகளாகும். எனவே பாரதி ஒரு புதிய உத்தியினைக் கையாளுகின்றார். பாப்பாவுக்கு மிகவுயர்ந்த அறிவுரைகளை விளக்கமாக எடுத்துரைக் கின்றார். அவற்றில் தமிழ்மொழியைப் பற்றிய மிக முக்கியமான கருத்து ஒன்றினைக் காணுதல் வேண்டும். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா.