பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரதியும் பாரதிதாசனும் இந்த எண்ணம் கொண்டவர் பாரதி என்பதனாலேதான் அவருடைய புகழ்மிக்க நாட்டு வணக்கப் பாடலிலும் இந்தக் கருத்தின் எதிரொலி விளங்கியது. வாழிய செந்தமிழ்! வாழ்க கற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு! * மேலும் அவர் தமிழ்மொழியின் அடக்கலாற்றாத அரும்பண்புகளைப் பேசுகிறார். தமிழ்மொழி வாழ்த்து' என்ற பகுகியில், வானம் அறிந்தத னைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்கிறார். நாட்டு வணக்கம் என் ற பாடலில் ஒவ்வொருவரின் தாய்மொழியிற் கிளர்ந்தெழும் எண்ணம் வளர்ந்து சிறக்கின்றது என்ற கருத்தினைத் தெரிவிக்கின்றார். எங்தையுங் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிங்காடே-அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிக்காடே-அவர் சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து சிறந்தது மிக்காடே எனவேதான் அவர் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே; எம் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்றார். இப் பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழியினை ஆதிசிவன் பெற்றெடுத்துள்ளானாம். அகத்தியன் என்பான் நிறை இலக்கணம் அமைத்துக்