பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.கா. 6 : கொடுத்தானாம். முத்தமிழாய் தமிழ் நில முழுதாண்ட வேந்தர்கள் நித்த நித்தம் தமிழ்மொழியைப் பேணி வளர்த்தனராம். ஆன்ற மொழிகளுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரெனத் தமிழமொழி வாழ்ந்ததாம். இதன் பயனாக, கள்ளையுங் தீயையுஞ் சேர்த்து-கல்ல காற்றையும் வானவெளியையுஞ் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப் புலவோர்கள்-பல தீஞ்சுவைக் காவியஞ் செய்துகொடுத்தார் என்கிறார் பாரதியார். மூன்று பெருந்தமிழ்ப் புலவர்கள் தோன்றியதனால் இத் தமிழ்நாடு பெருமை மிகப்பெற்றது என்பதனைப் பின்வருமாறு விளக்குகின்றார். கல்விசிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி யாரம் படைத்த தமிழ்நாடு என்றும் பாரதியார் கோடிப் பரவசப்படுவதனைக் காணப் பாரதியின் தமிழ்மொழி பற்றிய பெருமிதமும் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய மதிப்பும் ஒருங்கே புலனாகின்றன. "தமிழ்ச்சாதி' என் னும் தலைப்பிலமைந்த கவிதைப் பகுதியில் இப் பெருமிதத்தோடு பாரதியாரின் மனத்தில் ஏற்பட்டுப்போன கலக்கத்தினையும் காண்கின்றோம்.