பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 2. பாரதியும் பாரதிதாசனும் விதியே, தமிழச் சாதியை யெவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக்குணர்த்துவாய். ஏனெனில் சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குறளுறுதி யும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகுங் கருதியும் எல்லையொன்றின்மையெனும் பொருள தனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச்சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டி ருந்தேன். ஒரு பதினாயிரஞ் சனிவாய்ப்பட்டுத் தமிழச்சாதிதான் உள்ளுடைவின்றியுழைத்திடு நெறி களைக் கண்டென துள்ளங் கலங்கிடாதிருந்தேன். என்று கூறிப் பின் வாட்டமுறு நிலையினையும் வகையுற எடுத்து மொழிகின்றார். இந்தத் தமிழ்த்தாயின் நிலை படிப்படியே மாறிப் போயிற்று. தந்தை அருள்வலி யாலும் முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டுங் காலன்-என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் என்று குறிப்பிட்டுவிட்டுப் பாரதியார் மனவேதனையோடு பின்னர் மொழிவதனையும் கீழே காண்க. இன்னொரு சொல்லினைக் கேட்டேன்!-இனி ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள் கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!