பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

А.cит. 63 புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே அந்த i. மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவ தில்லை-அவை சொல்லுங் திறமை தமிழ்மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச்சாகும்.-அந்த மேற்குமொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ! சென்றிடு வீரெட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் தந்தை யருள்வலி யாலும்-இன்று சார்ந்த புலவர் தலைவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும்-புகழ் ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன். - மேற்காணும் பாடல்களை ஊன்றி நோக்கும்பொழுது பாரதி எந்த அளவிற்குத் தாய்மொழி பற்றிய வசை மொழியால் துடிதுடித்தார் என்பதையும், அவ்வசையினை நீக்கிடச் செயல்படவேண்டிய வழித்திறங்களை உள்ள படியே உளம் ஒன்றி உரைத்திருக்கின்றார் என்பதையும் ஒருங்கே காணவேண்டும். பாரதியார் பல மொழிகளைப் பல்வேறு சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காகக் கற்றுக்கொண்டுள்ளார். திருநெல்வேலியில் ஆங்கிலமும் தமிழும் பாங்குறக் கற்றார். ஆங்கிலக் கல்வியால் தீது தமக்குப் பல்லாயிரம் சேர்ந்த தாகவும், அக் கல்வியால் நலமோர் எட்டுனையும் காணவில்லையென்றும், இதை நாற்பதாயிரம் கோயிலிற்