பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரதியும் பாரதிதாசனும் சொல்வதற்குத் தாம் காத்திருப்பதாகவும் பாரதியார் தம் சுயசரிதையிற் குறிப்பிட்டுள்ளார். வளரும் இளம் பருவத்திலேயே தாய்மொழிப் பற்றில் அவர் கொண் டிருந்த அதிதீவிர வேட்கையும் அன்னிய மொழியாம் ஆங்கில மொழியிடத்தில் அவர் கொண்டிருந்த கசப்புணர்ச்சியும் காணலாம். ஆயினும் அவருக்கு ஆங்கிலம் நன்றாக வந்தது. ஆங்கிலேயரும் வியக்கும் வண்ணம் அம்மொழியிற் பேசவும் எழுதவும் அவர் வல்லவரானார். ஷெல்லிதாசன்” என்ற புனைபெயரில் அவர் ஆங்கிலக் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துக் தமிழில் தந்தார். பகவத்கீதையை வடமொழியிலிருந்து எளிமையாக இனிமையாகத் தமிழில் மொழிபெயர்:ம் துள்ளார். காசியில் சில காலம் தம் அத்தை வீட்டில் வசிக்க நேர்ந்த காரணத்தினால் அவருக்கு இந்திமொழி யில் இயல்பாகவே புலமை வாய்த்திருந்தது. புதுவையிற் பல ஆண்டுகள் வாழவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. வங்காளத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தபொழுது வங்காள மொழியிலும் புலமை பெற்று விளங்கினார். இலத்தீன், ஜெர்மன் முதலிய மொழிகளை விரும்பிக் கற்றுக்கொண்டார். திருக்குரி ஆனைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற முசுலி நண்பரின் வேண்டுகோளினை ஏற்று அரபு மொழியைப் பயின்றார். திராவிட மொழிகளில் தெலுங்கும், மலையாள மொழியும் அவருக்குத் தெரியும். இவ்வாறு பல மொழிகளை அறிந்திருந்த பாரதி, யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்று சொல்வாரானால் அக்கூற்று உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை எனக் கருதலாம்.