பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரதியும் பாரதிதாசனும் யும் பரவிவரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். * (மேற்படி, நூல், பக். 584) என்றும் குறிப்பிட்டிருக்கக் காணலாம். தமிழ்ம்ொழி புரையோடிப் போயிருந்த நிலைமை யினைக் கீழ்வரும் பகுதியில் பாரதி நம் கண்முன்கொண்டு வந்து காட்டுகின்றார். "உண்மையான கவிதைக்குத் தமிழ்நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகளை மொழிபெயர்த்துப் போட்டால் பலரிவாங்கி வாசிக்கிறார் கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புது நாவல்கள் எழுதுகிறார்கள். அவர்களுக்குக் கொஞ்ச லாபமேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒருசிலர் தோன்றி யிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப் பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக்காணும் போது அதில் ரஸ்மனுபவிக்க வழியில்லை" (மேற்படி, நூல் tu. 397) - தமிழ்மொழி இந்த வகையில் பின் தள்ளப்பட்டுப் பிற் போக்கு நிலையில் ஆட்சியாளராலும், பொதுமக்களாலும் கற்றறிந்த பெரியவர்களாலும் கருதப்பட்டு வந்த-இழி நிலையில் எண்ணப்பட்டு வந்த நிலையை மாற்றவேண்டு மென்று ஆவேசம் கொள்கிறார் பாரதியார். எனவே மக்களைப் பார்த்துப் பின்வருமாறு அறைகூவல் விடுக்கிறார்.