பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台铲 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப்பான்மை கெட்டு காமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் கன்றோ? சொல்வீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். அடுத்த பாடலில் தமிழ்ப் புலவர்கள் பற்றிப் பெரு Mதம் தோன்றப் பாரதியார் முழங்குகின்றார். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒருசொற் கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர். தமிழ்மொழியினை வானமளந்த தனைத்து மளந் வண்மொழி'யாக மாற்றுவதற்குப் பாரதியார் ஆக்க முறைகளில் வழி வகைகளை வகுத்திடுகின்றார். வெறும் சொல்வீச்சுக் கவிஞராக இல்லாமல் செயல்திட்டம் 1ச.மையுற வடிக்கும் செயல் வீரராகவும் பாரதியார் டிகழ்வதனைப் பின்வரும் பாடலிற் கண்டு தெளியலாம். பிறாாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;