பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாரதியும் பாரதிதாசனும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிகாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் இவ்வாறு ஆக்க வழிகளில் முயன்று தமிழை அரியாசனம் ஏற்றி அவனியிலுள்ளோர் அறியும்படி: செய்துவிட்டால் நிகழப்போவது என்ன என்பதனையும் பாரதியாரே பின்வருமாறு நெஞ்சு உவக்கும் வகையில் சுட்டிச் சென்றுள்ளார். உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும், வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருட்ரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார். இந்த நிலையைத் தமிழ்மொழி எட்டிப் பிடித்தல் உறுதி என்று கருதினார் பாரதியார். எனவேதான், வாழ்க கிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே m வான மளந்தத னைத்து மளக்திடு வண்மொழி வாழிய வே ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி யிசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி: என்றென்றும் வாழியவே