பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாரதியும் பாரதிதாசனும் இருபதாம் நூற்றாண்டுத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்க இருவர் பாரதியும் பாரதிதாசனுமாவர். இவ்விருவரையும் தமிழ் இலக்கிய வானின் நிலவாகவும் கதிராகவும் ஒருவாறு கொள்ளலாம். எட்டயபுரத்தில் கி. பி. 1881ஆம் ஆண்டு பிறந்த பாரதியார், தம் கவிப்புலமை காரணமாகப் பாரதி' எனச் சிறுவயதிலேயே அழைக்கப் பெற்றார். பாரதிதாசனும் சின்னஞ்சிறு வயதிலேயே கவிபுனையும் பெற்றி மிக்க வராகத் துலங்கினார். 18 வயதிலேயே கற்றுப் புலமை பெற்று ஆசிரியப் பணியினை ஏற்றார். இவ்விருவரும் முதன்முதலில் சந்தித்த இடம் பாண்டிச்சேரியில் ஒரு திருமண மண்டபத்திலாகும். வேணுநாயக்கர் வீட்டுத் திருமணத்தில் "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ" என்ற பாரதியின் நாட்டுப் பற்றோங்கும் பாடலைப் பாரதிதாசனும் உணர்ச்சியுடன், இசையுடன் பாடினார். அத் திருமண மண்டபத்தில் பாரதியார் வந்திருப்பதனைப் பாரதிதாசன் அறியார். பாட்டு முடிந்ததும் வேணுநாயக்கர் பாரதியாரைச் சுட்டிக் காட்டி அன்றைய சுப்புரத்தினத்தைப் பார்த்து "இவர் யார் தெரியுமில்லே" என்று கேட்டார். "தெரியாது" என்ற மறுமொழி சுப்புரத்தினத்திடமிருந்து வந்தது. "நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களா" என்று கேட்க "ஏதோ கொஞ்சம்" என்று சுப்புரத்தினம் அடக்கத்துடன் மறு மொழி தர, நீங்கள் என் பாட்டை உணர்ந்து பாடுகிறீர் கள்" என்ற பாராட்டைப் பின்னாளைய சாரதிதாசன் பெற்றார்."