பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாரதியாரின் தேசிய கீதங்கள் 1. பாரதியார் வாழ்வு 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் எட்டைய புரத்தில் சின்னசாமி ஐயர்-இலட்சுமி அம்மாள் அவர்கள் வாழ்ந்த இல்லற வாழ்வின் இனிய அயனாய்த் தோன்றிய கப்பிரமணிய பாரதியார், தம் கவிப்புலமையால் தம் பதினொன்றாவது வயதிலேயே பாரதி' என்னும் சிறப்புப் பட்டத்தினைப் பெரும்புலவர்கள் வழங்கச் சிறப்புடன் பெற்றார். வாழ்வின் தொடக்கக் காலத்திலேயே பெற்றோரை இழந்து துன்பப்பட்ட பாரதியார், அது போது காசியில் வசித்துவந்த தம் அத்தையார் ஆதரவில் கல்வி கற்றார். நாட்டு விடுதலை வேள்வியில் பங்கு கொண்டார். படித்தறியாத பாமரரையும் தோள் தட்டிக் துடித்தெழச் செய்யுமளவிற்கு அவருடைய தேசிய கீதங்கள் உணர்ச்சி விளைவிப்பனவாய் அமைந்தன. அன்னிய ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்குப் பயந்து பாரதியார் புதுச்சேரியில் சிலகாலம் மறைந்து வாழ்ந்த பொழுது எண்ணற்ற ஏற்றமிகு பாடல்களை எழுதிக் குவித்தார். சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் பொறுப்பேற்றுச் சிலகட்டுரைகளையும் கவிதைகளையும் எ ழு தி னா ர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளிடம் நீங்காப் பக்திகொண்டு வாழ்ந்த அவl இறுதியில் உடல் நலிந்து 1921ஆம் ஆண்டு செப்டம்ப 11ஆம் நாள் இயற்கை எய்தினார்.