பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.வா. 71 2. விடுதலைக்குப் பாடிய வீரக் கவிஞன் பாரதியார் பல பாடல்கள் எழுதியிருந்தாலும் அவரை நாட்டு மக்கள் விடுதலை வேட்கை வெறி கொண்ட கவிஞர் என்றே என்றென்றும் நோக்குவர். காரணம் நாடு அன்னியர் ஆட்சியால் அடிமையுற்று, தாழ்வுற்று விடுதலைத் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற நேரத்தில் அன்னிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பாட்டிசைத்து மக்கள் நெஞ்சில் சுதந்திரக் கனலைச் சுடர்விட்டு எரியச் செய்த ஒப்பற்ற இருப்பணி பாரதியார் என்னும் மகாகவி ஒருவரையே சேரும் எனலாம். 3. தேசீய கீதங்கள் 1908ஆம் ஆண்டில் "ஸ்வதேச கீதங்கள்’ என்னும் நூல் முதன்முதவில் வெளியgயிற்று. 1909ஆம் ஆண்டில் 'ஜன்மபூமி' (ஸ்வதேச கீதங்கள்-இரண்டாம் பாகம்) வெளியாயிற்று. "மாதா மணிவாசகம்" என்னும் நூல் 1914ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் வெளியாயிற்று. பாரதியாரின் .ெ ந ரு ங் கி ய நண்பர் திரு. பரவி க. நெல்லையப்ார் நாட்டுப் காட்டு’ என்னும் பாடல் தொகுதியை முதலில் வெளியிட்டார். "முகவுரை என்ற தலைப்பில் பாரதியார் எழுதி யிருக்கும் சில வரிகள் சிந்திக்கத் தக்கன. அவை வருமாறு : இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மன கோசரமாகிய ஸ்ெளந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில், ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குதுாஹலமடைகின்றது.