பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாரதியும் பாரதிதாசனும் சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமே யன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் .ெ ப ற் று தி திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே, நாட்டில் ஒர் புதிய ஆதர்சம்-ஒர் கிளர்ச்சி-ஒர் தர்மம்-ஒர் மார்க்கம் தோன்றுமேயானால், மேன்மக்களின் நெஞ்ச மனைத்தும், இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல, அவ்வாதர்சத்தை நேர்க்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர் ைசுபங்களுக்கும் மூலாதார மாகிய "தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங் களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப் புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து, மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். நான் எதிர்பார்த்திராத வண்ணமாக மெய்தி தொண்டர்கள் பலர் "இம்மலர்கள் மிக நல்லன" என்று பாராட்டி, மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதா வும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனாகி, மறுபடி யும் தாயின் பதமலர்க்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கின்றேன். இவை மாதாவின் திரு வுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக் கின்றேன்; "குழலினிது யாழினி தென்ப தம் மக்கள் மழலைச்சொற் கேளாதவர்" என்பது வேதமாதலின். மேற்காணும் பகுதிகளிலிருந்து நாம் தெரிந்து கொள்வன நான்கு செய்திகளாகும்.