பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6А. с т. 73 1 "சர் ைகபங்களுக்கும் மூலாதாரமாகிய தேச பத்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது" என்று பாரதியார் குறிப்பிடுவதால் பாரதியார் தேசபக்தியிற் கொண்டுள்ள அளவிறந்த நாட்டம் புலனாகின்றது. 2. நல்லோருடைய குணங்களிலே குறைவுடைய வனாகி யானும் தேவியினது கிருபையால் அப் புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன்' என்ற பாரதியார் கூறுவதால் தம்மைக் குறைவுடைய பிறவியாகக் கூறிக் கொள்ளும் அடக்கவுணர்வும், தேவியின் திருவருளால் எல்லாம் சித்திக்கும் என எண்ணும் அவர்தம் சக்தி வழிபாடும் ஒருங்கே வெளிப்படுகின்றன. 3. "நான் எதிர்பாராத வண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் இம்மலர்கள் மிக நல்வன என்று currurrrr .tq. மகிழ்ச்சி அறிவித்தார்கள்"-இதனால் பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே பலரால் தேசிய இதங்கள் பாராட்டப்பெற்றன என்ற செய்தி விளங்கு கின்றது. 4. "குழலினித யாழினி தென் தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்' என்பது வேதமாகலின்" என்ற இறுதிப் பகுதியால் பாரதியார் திருக்குறளையே வேதம் என்று எண்ணி மதித்த பான்மை புலனாகின்றது. 4. தேசிய கீதங்கள்-உள்ளீடு தேச பக்திப் பாடல்கள்' என்ற பெருந்தலைப்பில் 1. பாரத நாடு, 2. தமிழ்நாடு, 3. சுதந்திரப் பள்ளு, 4. தேசிய இயக்கப் பாடல்கள், 5. தேசியத் தலைவர்கள், 6. பிற நாடுகள் என்ற ஆறு சிறு தலைப்புகளில் ஐம்பத்து,