பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாரதியும் காரதிதாசனும் மூன்று (58) பாடில்கள் கொண்டதாகத் தேசிய கீதங்கள் அமைந்துள்ளன. 5. பாரத காடு பாரதியார் நாட்டுப்பற்றினை உயிரி மூச்சாகக் கொண்ட கவிஞர். எனவே பாரதியாரின் தேசிய கீதங்களில் நாட்டுப்பற்று என்னும் நல்ல உயிர்காற்று" பெரிதும் வீசக் காணலாம். தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டில் அமைந்துள்ள வந்தே:மா.தரப் பாடல், ஆயிர முண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகலென்ன திே: என்பதனையும், ஒன்று பட்டாலுண்டு வாழ்வே-கம்மில் ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே என்பதனையும் வலியுறுத்துகின்றது. "நாட்டுத் தாயே உனக்கு வணக்கம்' என்னும் பொருள் தரும் வந்தே மாதரம்' என்னுஞ் சொல் ஒரு வங்காளச் சொல்லாகும். நொந்தே போயினும் வெந்தே மாயினும் பாரத தேசத்தவர் உவந்தே சொல்வது ந்ைதே மாதரம் என்கிறார் பாரதியார். எந்தையுங் தாயும் மகிழ்ந்து குலாவி யிருந்தது மிக்காடே என்று தொடங்கும் பாடல் மாணவர்கள் மினத்தில் இருத்த வேண்டிய பாடலாகும். ஏனெனில் பாரத மணித் திருநாட்டில் பிறந்ததற்காக ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதனைப் புதிய நோக்கில் பாரதியார் காணுவதனை இப்பாடலில் காணலாம்.