பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

የፀ பாரதியும் பாரதிதாசனும் இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழையராகி யினி மண்ணிற் றுஞ்சோம் தன்னலம் பேணி யிழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனி லினிக்கையை விரியோம் என்று தாய்நாட்டுக்காக மக்கள் மேற்கொள்ள வேண்டிய சபதத்தினை எடுத்து மொழிகின்றார். "ஜயபாரத என்ற பாடலில் பாரத அன்னையைப் பலபடப் பாரதியார் வாழ்த்தி வணங்குகின்றார். அடுத்து, 'பாரதமாதா என்ற தலைப்பில், ஒன்று பரம்பொருள் காமதன் மக்கள் உலகின்பக் கேணி என்று இறைவனையும், இறைவன் படைத்த உயிர்களை யும், அவ்வுயிர்கள் துய்க்க வேண்டுமென்று அவன் படைத்த இன்பங்களையும் சுட்டுகின்றார். 8. பாரதத் தாய் காவடிச் சிந்தில் ஆறுமுகவடி வேலவனே என்ற வர்ண மெட்டில் அமைந்துள்ள எங்கள் தாய் என்ற தலைப்பில் அமைந்துள்ள பாடல் நெஞ்சினிலே நிறுத்தற் குரியது. o தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்நிலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பின ளாமெங்கள் தாய் என்று பாரதத்தாயின் பழமையும் பெருமையும் பாரதியா ரால் பசுமரத்தாணியென நம் மனத்தில் பதியும்வண்ணம் கிளத்தப்பட்டுள்ளன. i.