பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பா. ሃ? முப்பது கோடி முகமுடையாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள்-இவள் செப்புமொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள் என்ற பாடல் ஒருமித் த பாரதத்தின் உயர்நிலையை, உயிர் நிலையை எடுத்து மொழிகின்றது. பூமியினும் பொை றமிக்குடையாள் என்ற அடியும், கல்லற காடிய மன்னரை வாழ்த்தி கயம்புரி வாளெங்கள் தாய்-அவர் அல்லவ ராயினவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவாள் என்னும் பாடலும் பாரதத் தாயின் பண்பினைப் பகர வல்லனவாக உள்ளன. 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி, உள்ளத்திலே உவகையினையும் ஒரு புத்தெழுச்சியினையும் தரவல்லது "பொழுது புலர்ந்தது: யாம் செய்த தவத்தால் புன்மை யிருட்கணம் போயின யாவும்" என்ற அடிகளில் அடிமையிருளில் மூழ்கி அல்லலுற்றுத் தவிக்கும் பாரத மக்களுக்கு ஒரு நம்பிக்கையொளியினை ஏற்றிக் காட்டு கின்றார். பாரத மாதா நவரத்னமாலை', 'பாரததேவி யின் திருத்தசாங்கம் முதலிய பாடல்கள் பாரததேவியை வழிபட்டுப் பாட்டியற்றிய பாரதியாரின் நாட்டுப் பற்றினை நயமுறக் கிளத்தி நிற்கின்றன. 9. தாயின் மணிக்கொடி "தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்" என்று தொடங்கும் பாடல்