பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 78 பாரதியும் பாரதிதாசனும் பாமர மக்களின் நெஞ்சங்களையெல்லாம் அள்ளும் வகை யில் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில்" அமைந்திருக்கக் காணலாம். தங்கள் நல் லுயிரிந்துங் கொடியினைக் காக்கும் நம்பற்குரிய வீரர்களைப் பாரதியார் தாயின் மணிக்கொடி யின் கீழ் அணிவகுத்து நிற்பதனைப் பார்க்கின்றார். 10. பிரிவெனும் பேதமை 'நொண்டிச் சிந்து மெட்டில் அமைந்துள்ள நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்' என்ற பாடல் பாரத நாட்டின் அன்றைய நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுவ தாகும். - ஐந்து தலைப் பாம்பு என்பானாம் அப்பன்; ஆனால் மகன் ஆறு தலைப் பாம்பு என்று சொல்லிவிட்டால் அந்த ஒரு காரணத்தினாலேயே இருவரும் நெஞ்சம் மாறுபட்டுப் பகைகொண்டு நெடுநாள் அவ்வாறே வாழவும் தலைப் பட்டுவிடுவார்களாம். இதனை நயம்பட உரைக்கிறார் பாரதியார். கஞ்சி குடிப்பதற்குரிய வாய்ப்பினைக் கூடப் பெறாத பலர், அன்று பாரத தேசியத்தில் இருந்தார் . களாம். அதுவல்ல கொடுமை! அதனினும் கொடுமை, தாங்கள் ஏன் கஞ்சிகூடக் குடிக்க முடியாமல் துன்பப்படு கிறோம் என்று தெரிந்துகொள்ளக்கூடிய அறிவுமில்லாத வர்களாக அம்மக்கள் வாழ்கிறார்களாம். நாள்தோறும் பஞ்சத்தால் வாடிப் பட்டினியால் பரிதவித்துச் செத்து மடியும் இக்கோடானு கோடி மக்களின் துயரினைத் தீர்ப்பதற்கு வழியேதும் இல்லையா என்று கருதிக் கவி பாடிடும் பாரதியாரின் பாட்டிலே நெஞ்சைப் பிழியும் அவலம் ததும்பி நிற்பதைக் காணலாம்.