பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாரதியும் பாரதிதாசனும் பாயுது காதினிலே" என்று அவர் பாடியிருப்பதனைப் பழக்கும்பொழுது அவர்தம் செந்தமிழ் நாட்டுப்பற்று செவ்விதின் புலனாகின்றது. 'கல்வி சிறந்த தமிழ்நாடு" என்றும், "புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்றும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும், 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" என்றும் பாரதியார் பெருமிதம் பொங்கித் ததும்பிப் பாடுகின்றார். தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களைப் பார்த்து, பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகளை மேல்நாடுகள் வளர்ப்பதுபோல் தமிழ் நாடும் வளர்க்க வேண்டும், என்று கூறி, சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச் - செல்வங்கள் யாவுங் கொணர்த்திங்கு சேர்ப்பீர் என்று வேண்டுகோளும் விடுக்கின்றார் பாரதியார். 13. தமிழ்மொழியின் சிறப்பு ஆன்ற மொழிகளினுள்ளே-உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று தமிழ்மொழியைக் குறிப்பிட்ட பாரதியார். பிறிதோரிடத்தில், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று தமிழ் மக்களுக்குக் கட்டளையிடுகின்றார்.