பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M.uir. 8 ! "தமிழ்" என்ற தலைப்பில் பாரதியார் பாடியுள்ள பாடல் மனப் பாடஞ் செய்தற்குரியதாகும். யாமறிந்த புலவளிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றும், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் பெயர்த்தலோடு, இறவாத புகழுடைய புது நூல்களைத் தமிழ்மொழியில் இயற்றிட வேண்டும் என்கிறார். உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினில் ஒளியுண்டாகும். கலைப்பெருக்கமும் கவிப் பெருக்கமும் வெள்ளப்பெருக்கம் போல் மேவிடுமானால் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவிபெற்றிடுவர் என்று கூறி, முடிவாக தெள்ளுற்ற தமிழமுதி ன்சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் என்கிறார். வான மளந்த தனைத்து மளந்திடு வண்மொழி வாழியவே என்றும். வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே - என்றும் பாரதியார் கொண்ட வேட்கை அவர்தம் செந்தமிழ்ப் பற்றைச் சீரிதாகக் கிளத்தும். சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவு மழகுங் கருதியும் 'எல்லையொன்றின்மை யெனும் பொருளதனைக் - . .i 6سمtrr