பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&2 பாரதியும் பாரதிதாசனும் கம்பன் குறிகளாற் காட்டிட முயலு முயற்சியைக் கருதியும் முன்புங்ான் தமிழச் சாதியை யமரத் தன்மை வாயந்தது'வென் றுறுதி கொண்டிருந்தேன் என்கிறார் பாரதியார். 14. சுதந்திரப் பள்ளு தில்லைவெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ என்னும் பாடல் சென்ற நூற்றாண்டில் புகழ் சிறக்க விளங்கிய பாடலாகும். அப்பாடலின் வர்ணமெட்டில் அமைந்ததே சுதந்திரப் பெருமை என்னும் தலைப்பில் அமைந்த பாடல் - "வீர சுதந்திரமே பாரத நாட்டு மக்களின் உயிர் மூச்சான லட்சியம் என்பதனை இப்பாடலில் பாரதியார் புலப்படுத்தும் பாங்கே தனித்திறன் வாய்ந்ததாகும். வீரசுதந்திரம் வேண்டி கின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?- என்றும் ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ? என்ற தொடக்கப் பாடல் ஒரு சிறந்த தொடக்கம் எனலாம். கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ? என்றும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ? என்றும் அவர் காட்டும் செய்திகள் கருத்தாழம் மிக்கன வாகும்.