பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

могат. SJ "சுதந்திரப் பயிரி என்ற பாடல் சோகம் இழை யோடும் பாடலாகும். ஓராயிர வருட மோய்ந்து கிடந்தபினர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? нrabripth, மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் கோவதுவுங் காண்கிலையோ என்றும் பாரதியார் கூறும் கூற்றில் அவல உணரிவுகள் (element of pathos) பொங்கி நிற்பதனைக் காணலாம். என்று தணியு மிந்தச் சுதந்திர தாகம்? என்று முடியு மெங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? என்ற அடிகள் வைரமணி விளக்குகள். எந்நிலையிலும் கதந்திர தேவியின் திருப்பதத்தினை மறவாத நிலை யினைப் பாரதியார் சுதந்திர தேவியின் துதி” என்ற பாடலில் வெளிப்படுத்துகின்றார். 15. பெண் விடுதலை பெண்ணின் விடுதலைக்குப் பாடிய பாவலன் பாரதி, பெண்ணுக்கு விடுதலை இங்கில்லையென்றால் இம் மண்ணில் எவருக்கும் விடுதலை இல்லை என்கின்றார். பறையருக்கும் தீயர் புலையருக்கும் விடுதலை என்று பாடிய கவிஞர், மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று குறிப்பிட்டு,