பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H,or. 85 "தொண்டு செய்யு மடிமை-உனக்குச் சுதந்திர நினைவோடா" என்ற பாடல் ஒவ்வோர் இந்தியனும் களம் துடித்துப் படிக்கவேண்டிய பாடலாகும். சேர்ந்து வாழு வீரா? உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ? rறு சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரத நாட்டு மகனொருவனை ஆங்கிலேயே அதிகாரி ஒருவன் கேட்ப தாக அமைந்துள்ள பாடல் எண்ணவூட்டல் சக்தி (thought provoking) நிறைந்த பாடலாகும், தேச பக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி என்ற பாடலையும் உடன் காணவேண்டும். வங்தே மாதர மென்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் முடிதாழ்த்துவோம் காங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ? ஒற்றுமை வழியொன்றே வழியென்ப தோர்ந்திட்டோம்-நன்கு தேர்ந்திட்டோம் சதையைத் துண்டு துண்டாக்கினு முன்னெண்ணம் சாயுமோ ஜீவன்-ஒயுமோ என்ற அடிகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க நினைக்கும் தேசபக்தன் உள்ளத்தில் என்றென்றும் நின்று நிலவும். "நடிப்புச் சுதேசிகன்’ என்ற பாடலைப் பலமுறை பயில்க. சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிங்தை யிரங்காரடி-கிளியே - செம்மை மறந்தாரடி என்றபடி, நடிப்புச் சுதேசிகளைப் பாரதியார் நமக்கு இனங்காட்டுகின்றார்.