பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9). Carr. 87 முறத்தினாற் புலியைக் காக்கு மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினால் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து கின்றாய். ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சியை இமயமலை வீழ்ந்த தற்கொப்பாகக் குறிப்பிட்ட பாரதியார் ஒர் அரிய உவமையினையும் கையாளுகின்றார். புயற்காற்றுச் சூறைதன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போல என்ற உவமை அழகியதும் அரியதுமாகும். பீஜித் தீவின் கரும்புத் தோட்டத்திலே அவதியுறும் பெண்களை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றார். கால்களும் கைகளும் சோர அவர்கள் வருந்துவது, விம்மி விம்மியழுவது, நெஞ்சங் குமுறுவது, துன்பப்பட்டு மடிவது அனைத்தும் பாரதியாரால் அவலந் தோன்றப் பாடப் பட்டுள்ளன. 20. முடிவுரை காரதியார் பல திறப்பட்ட பாடல்களைப் பாடியிருந் தாலும் அவர் நாட்டு மக்களால் நினைவு கூறப்படுவது அவர்தம் தேசிய கீதங்களால் ஆகும். விடுதலை வேட்கை வெறிகொண்டு பாடிய தேசியக் கவிஞர் அவர் எனலாம். நாடு விடுதலை பெற்ற பிறகும் அவர் பாடிய தேசிய கீதங்கள் மக்களிடையே வாழ்கின்றன. ஏனெனில் அப் பாடல்களில் அமைந்துள்ள சுதந்திர உணர்வு என்றென்றும் வாழவல்லனவாகும். பாரதியார் சக்திப் பாடல்களும், காதற் பாடல்களும், தத்துவப் பாடல்களும், பாடியிருப்